பெண் சக்தி..26.2.'22


பெண் சக்தி

சக்தி...தளத்தின் பெயரைக் கேட்கும்போதே மனதில் பாரதி வரிகளான சக்தி பிறக்கிறது. நான் ராதா பாலு. மத்யமரில் எழுதியிருப்பதால் பலரும் அறிந்திருப்பீர்கள். என்னை இதில் இணைத்த அனுராதா விஸ்வேசனுக்கு என் நன்றி🙏🏼. இது என் முதல் பதிவு.


சக்தி  என்பது, திறன், வலிமை, முயற்சி, ஆற்றல், வேகம், திடம்என பல பொருள்களைக் குறித்தாலும் இத்தனையும் உள்ளடக்கிய பெண் சக்தியை யாரும் மறுக்க முடியாது. 


சக்தி என்பது உயிருள்ள அனைத்திலும் இருந்தாலும் ஒரு வீட்டை உருவாக்கு வதிலும், தலைமுறையை பெருக்குவதிலும், எந்த துன்பம் வந்தபோதும் கலங்காமல் நின்று குடும்பத்தை திறம்பட நடத்துபவளும் சக்தியாகிய பெண்ணே. 


இதில் நாமெல்லாம் மட்டுமா சக்தி..பூக்காரி, வேலைக்காரி, காய்கறிக்காரி என்று ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் வியாபித்து நம்மை வழிநடத்துபவள் அந்த மகாசக்தி. அவளின் பல ரூபங்கள்தான் நாம் ஒவ்வொருவரும் என்பது என் கருத்து.


இத்துடன் நான் நவராத்தியில் உருவாக்கிய நம் ஆதார சக்தியான அன்னபூரணி🙏🏼



Comments

Popular posts from this blog

தந்தையர்_தினம்..19.6.'22

மகத்தான உறவு மாமா...11.6.'22

குறளும்_கதையும்..19.6.'22