Posts

Showing posts from June, 2022

கல்யாணமாம்_கல்யாணம்..1.4.'22

Image
Theme_of_the_week #கல்யாணமாம்_கல்யாணம் பங்குனி கல்யாண மாதம் என்றதுமே மனம் பரவசமாயிடுத்தே! ஆமாம்.. என் கல்யாணமும் இதே மாதம்தானே நடந்தது! 45 ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 5ந்தேதி நடந்த திருமணம்...அந்த நாள் முறைப்படி வரதட்சணை..வைர மூக்குத்தி..இத்தனை பவுன் நகைகள்..வெள்ளி பித்தளை பாத்திரங்கள்..என்று சாங்கோபாங்கமாக நடைபெற்ற கல்யாணம்!  என் அப்பா வங்கி அதிகாரி. நாங்கள் அச்சமயம் முசிறியில் இருந்ததால், நாங்கள் குடியிருந்த வீடே சத்திரம் போல் பெரிய்...ய வீடு. அதிலேயே திருமணம். இந்த நாளைப் போல் விதவிதமான புடவைகள்...வேளைக்கு ஒரு அலங்காரம்.. ப்யூட்டி பார்லரில் ஆளையே மாற்றும் மேக்கப்..மாலை ரிசப்ஷன்..ம்ஹூம்..எதுவுமே இல்லாத பாரம்பரிய அந்நாளைய திருமணம்! பெண் பார்த்த பின்பு மூன்று மாதங்களுக்கு பின்பே கல்யாணம். அவர் முகமே சுத்தமாய் மறந்து போய், நிச்சயதார்த்தத்தன்று பார்த்தபோது ...அட இந்த ஆசை முகம் மறந்து போச்சே...என்று பாடத் தோன்றியது! மாப்பிள்ளை அழைப்பு காரில் என்னையும் உட்காரச் சொல்லி என் கணவரின் நண்பர்கள் சொன்னபோது, எங்கள் இரு பக்கத்து தாத்தாக்களும் அனுமதிக்காததால், பாவமாக என் கணவர் மட்டுமே ஊர்கோலம் சென்றா

தந்தையர்_தினம்..19.6.'22

Image
  தந்தையர்_தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி  இன்று தந்தையர் தினம். அப்பா என்றதுமே நம் மனம் நம்மையறியாமல் துள்ளுகிறதே! அந்த நாள் உருவானதை அறிவோமா? உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் வில்லியம்ஸ் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் என்பவர் 1872 -ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ வீரராக இருந்தார். ஜாக்சன் ஸ்மார்ட்க்கும், அவர் மனைவி எல்லனுக்கும் பிறந்தவர்தான் சொனாரா ஸ்மார்ட் டோட்.  சொனாரா ஸ்மார்ட் டோட் 16 வயதாக இருக்கும் போது அவரது தாய் ஆறாவது பிரசவத்திற்கு பின் உயிர் இழந்தார். தன் மனைவி இறந்த பிறகு ஜாக்சன் ஸ்மார்ட் மறுமணத்தைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் தனது ஆறு குழந்தைகளையும் தனியாக வளர்த்தார். அவர்களின் எதிர்காலத்தை  மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தார்.  அவரது இந்தத் தியாகச் செயல் அவரது மகள் சொனாரா ஸ்மார்ட்டை  வெகுவாக கவர்ந்தது.இந்நிலையில் 1909 ஆம் ஆண்டு சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.  இதையறிந்த சொனாரா ஸ்மா

குறளும்_கதையும்..19.6.'22

 "ThemeOfTheWeek குறளும்_கதையும் தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். தந்தையின் கனவு.. ..ஏய் சரசு..அங்கன என்ன வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கிற? சீக்கிரம்  ஓலையை எடுத்துக் கொடு. மழை வந்துச்சுன்னா இன்னைய பாடும் திண்டாட்டமாயிடும்.. சின்னராசு அவசரப் படுத்தினான். ..எனக்கும் வயசாகாதுல்ல. மெதுவாதான வேலை செய்ய முடியும். ராசாவாட்டம் ஆம்பளை புள்ளையைப் பெத்திருக்கோம். பிற்காலம் சொகமா இருக்கலாம்னு நினைச்சேனே? எல்லாம் கனவா போச்சு.. ..அட. அழுவாத சரசு. நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான். அவன் என்னை மாதிரி கஷ்டப்படாம பெரிய வேலைக்கு போய் நல்லா சம்பாதிச்சு பெரிய பேரு வாங்கி உயர்வா வாழணும். என் பிள்ளையால எனக்கு நல்ல பேர் கிடைக்கணும்னு நினைச்சுதான நம்ம  வீட்டை வித்து அவனைப் படிக்க வெச்சோம். எப்படியோ அவன் நல்லா இருந்தா சரி.. ..இப்படி ஒரு நல்ல அப்பாவை அவனுக்கு பெருமையா வெச்சுக்க தெரியலையே. ஒரு அப்பாவா உங்க கடமையை சரியா செஞ்சுட்டீங்க.வருத்தப் படாதீங்க அவனும் ஒருநாள் உணர்ந்து வருவான்.. கண்கலங்கினாள் சரசு. என்ன ஆனாலும் பெண்ணாயிற்றே? ஒருவழியாக வைக்கோலைப் பரப்பி வேலையை முடித்த சின்னராசு கீழ