Posts

Showing posts from July, 2022

தாய் மண்ணே வணக்கம்🙏🏼4.3'22

Image
தாய் மண்ணே வணக்கம்🙏🏼 தாய்மண் என்றால் நாம் பிறந்த பாரத தேசம்தான் என்பது என் கருத்து. நான் பிறந்த மண் கோவில்களுக்கும் திருவிழாக்களுக்கும் மட்டுமா...தங்கம், வெள்ளி, பித்தளை, ஈயம் போன்ற பாத்திரங்களுடன் பட்டுப். புடவை, பாரம்பரியம் என்று பலவற்றிற்கும் உலகம் முழுதும் புகழ் பெற்ற கும்பகோணம்.  நான் பிறந்தது குடந்தையில் பக்தபுரித் தெருவிலுள்ள பஹோலா பார்மஸி என்ற வீட்டில். நான் பிறந்த சமயம் அது ஹோமியோபதி மருத்துவமனையாக இருந்ததாம். அதன் பின்பக்கம் இருந்த வீட்டில் என் தாத்தா குடியிருந்தார். அங்கு பணி புரிந்த நர்ஸ்தான் என் அம்மாவுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தாராம். அதன்பின் மருத்துவமனை விரிவுபடுத்தப் பட்டபோது எதிர் வீட்டிற்கு மாறிவிட்டார்கள். இன்றும் அந்த இடத்தைப் பார்க்கும்போது இன்றும் எனக்கு என் அம்மாவின் நினைவு வரும். விடுமுறைகளுக்கு அங்கு போவதோடு சரி. என் அப்பா வங்கி அதிகாரியானதால் மாறுதல் வந்து கொண்டே இருக்கும். எட்டு ஆண்டுகள் சீர்மிகு சென்னையில் இருந்தபோது சென்னை முழுதும் பெற்றோரோடு சுற்றிப் பார்த்த நினைவுகள் மறக்குமா! அப்பாவுடன் ஐந்தாறு ஊர்கள், பின் திருமணத்திற்கு பின் கணவரோடு தமிழகம் மட்ட

பெண் சக்தி..26.2.'22

Image
பெண் சக்தி சக்தி...தளத்தின் பெயரைக் கேட்கும்போதே மனதில் பாரதி வரிகளான சக்தி பிறக்கிறது. நான் ராதா பாலு. மத்யமரில் எழுதியிருப்பதால் பலரும் அறிந்திருப்பீர்கள். என்னை இதில் இணைத்த அனுராதா விஸ்வேசனுக்கு என் நன்றி🙏🏼. இது என் முதல் பதிவு. சக்தி  என்பது, திறன், வலிமை, முயற்சி, ஆற்றல், வேகம், திடம்என பல பொருள்களைக் குறித்தாலும் இத்தனையும் உள்ளடக்கிய பெண் சக்தியை யாரும் மறுக்க முடியாது.  சக்தி என்பது உயிருள்ள அனைத்திலும் இருந்தாலும் ஒரு வீட்டை உருவாக்கு வதிலும், தலைமுறையை பெருக்குவதிலும், எந்த துன்பம் வந்தபோதும் கலங்காமல் நின்று குடும்பத்தை திறம்பட நடத்துபவளும் சக்தியாகிய பெண்ணே.  இதில் நாமெல்லாம் மட்டுமா சக்தி..பூக்காரி, வேலைக்காரி, காய்கறிக்காரி என்று ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் வியாபித்து நம்மை வழிநடத்துபவள் அந்த மகாசக்தி. அவளின் பல ரூபங்கள்தான் நாம் ஒவ்வொருவரும் என்பது என் கருத்து. இத்துடன் நான் நவராத்தியில் உருவாக்கிய நம் ஆதார சக்தியான அன்னபூரணி🙏🏼

மகத்தான உறவு மாமா...11.6.'22

Image
  ThemeOfTheWeek #மனதில்_நின்ற_உறவுகள்.. மகத்தான உறவு மாமா... உறவுகளில் யாரை ரொம்பப் பிடிக்கும் என்றால் யோசிக்காமல் மாமா என்போம். அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் உடன் கிளம்புவது மாமா வீட்டுக்குத்தான்!  தன் சகோதரி குழந்தைகளுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்கள் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன்தான். இன்றும் மாமா வருகிறார் என்றால் குழந்தைகளின் சந்தோஷம் சொல்லிமாளாது! தம் சகோதரிகள் குழந்தைகளின் ஒவ்வொரு நிகழ்விலும், சித்தப்பா பெரியப்பாக்களை விட மாமாவின் பங்கு முக்கியமானது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் அனைத்திலும் மாமாவுக்கே முதல் மரியாதை. இப்பொழுது ஒரு குழந்தை போதும் என்று நினைப்பவர்களுக்கு சகோதரபாசம் பற்றி தெரியாத தோடு, இந்த மாமா சித்தி பெரிமா உறவெல்லாம் தெரியவே வழியில்லாதது துரதிர்ஷ்டமே. எல்லா விஷயங்களுக்கும் பாதுகாப்பாக "பேக்அப்" (Backup) வைத்துக்கொள்ளும்  மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு மாமா அத்தை போன்ற ஒரு பாசமான backup இல்லாத பாதுகாப்பற்ற நிலையை  தம் க

தந்தையர்_தினம்..19.6.'22

Image
  தந்தையர்_தினம் அப்பா...அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது... வித்யாசமான பாசம் கொண்டது!  இந்த வார்த்தையை சொல்லும்போதே மனம் சிலிர்க்கிறது. என் அப்பாவுக்கு என்னிடம் ரொம்ப ஆசை என்பார் என் அம்மா. முதல் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என்ற என் அப்பாவின் ஆசைப்படி நான் பிறந்ததால், எனக்குப் பின் மூன்று சகோதரர்கள் பிறந்தாலும், என் அப்பாவுக்கு என்னிடம் தனிப் பாசம் உண்டு என்பதை நான் பலமுறை உணர்ந்து அனுபவித்திருக்கிறேன்.  சிறு வயதில் அவர் என் கைபிடித்து பள்ளி அழைத்துச் சென்றது, எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தது, நான் படிப்பில் சிறப்புப் பெற்றபோது பெருமிதப் பட்டது, என்னைப் பாடச் சொல்லி ரசித்தது, எனக்கு குழந்தைகள் பிறந்தபோது ஒரு தாத்தாவாக சந்தோஷப் பட்டது, அவர்களின் படிப்பு,திருமணம் இவற்றை பாசத்தோடு ரசித்து அனுபவித்து பாராட்டி வாழ்த்தியது, கொள்ளுப் பேரன் பேத்திகளுடனும் விளையாடி மகிழ்ந்தது... என்று அவரின் பாசத்துக்கு சான்றாக எத்தனை விஷயங்கள்!  எனக்குத் திருமணம் நடந்த அன்று, அவர் மடியில் அமர்ந்து எனக்கு திருமாங்கல்ய தாரணம் செய்தபோது என் அப்பா கண்  கலங்கி அழுதது இன்னும் என் கண்களிலேயே நிற்கிறது. அதை ந