தந்தையர்_தினம்..19.6.'22

 



தந்தையர்_தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி  இன்று தந்தையர் தினம். அப்பா என்றதுமே நம் மனம் நம்மையறியாமல் துள்ளுகிறதே! அந்த நாள் உருவானதை அறிவோமா?


உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.


அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் வில்லியம்ஸ் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் என்பவர் 1872 -ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ வீரராக இருந்தார். ஜாக்சன் ஸ்மார்ட்க்கும், அவர் மனைவி எல்லனுக்கும் பிறந்தவர்தான் சொனாரா ஸ்மார்ட் டோட். 


சொனாரா ஸ்மார்ட் டோட் 16 வயதாக இருக்கும் போது அவரது தாய் ஆறாவது பிரசவத்திற்கு பின் உயிர் இழந்தார். தன் மனைவி இறந்த பிறகு ஜாக்சன் ஸ்மார்ட் மறுமணத்தைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் தனது ஆறு குழந்தைகளையும் தனியாக வளர்த்தார். அவர்களின் எதிர்காலத்தை  மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தார். 


அவரது இந்தத் தியாகச் செயல் அவரது மகள் சொனாரா ஸ்மார்ட்டை  வெகுவாக கவர்ந்தது.இந்நிலையில் 1909 ஆம் ஆண்டு சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. 


இதையறிந்த சொனாரா ஸ்மார்ட் 'என் தந்தையின் தியாகம், அன்னையர்களின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை' எனக்கூறி தன் தந்தையின் பிறந்தநாளை தந்தையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என தேவாலயத்தில் வேண்டு

கோளிட்டார்.


இதற்கு அனுமதியும் கொடுக்கப் பட்டு, அவரது தந்தையின் பிறந்தநாளான ஜுன்5 தந்தையர் தினமாகக் கொண்டாடப் பட்டது. 


பின்பு விடுமுறை நாளாக இருக்க வேண்டும் என்பதால் ஜூன் மூன்றாம் ஞாயிறன்று கொண்டாடப் படுகிறது. அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் தந்தையர் தினத்தை அங்கீகரித்தார்.


தன்னலமின்றி தம் குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்கும் அனைத்து தந்தையரின் அன்புக்கும், பாசத்திற்கும், தியாகத்திற்கும் பரிசாக இந்த தந்தையர் தினம் விளங்குகிறது.


அனைத்து தந்தையர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐


Comments

Popular posts from this blog

மகத்தான உறவு மாமா...11.6.'22

குறளும்_கதையும்..19.6.'22